* பிரெஞ்ச் கயானாவில் இருந்து செலுத்தி சாதனை
* ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என இஸ்ரோ அறிவிப்பு
பெங்களூரு : தகவல் தொடர்பு சேவைகளுக்கான 'ஜிசாட்-31' செயற்கைக்கோள் ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நாட்டில் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தகவல் தொடர்புக்காக 40வது செயற்கைக்கோளாக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-31 செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள பிரெஞ்ச் கயானாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கொரூவ் நகரில் உள்ள விண்கல ஏவுமையத்திலிருந்து ஐரோப்பாவின் ஏரியன்-5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.31 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியின் நிலப்பரப்பில் இருந்து 14,638 கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பிரெஞ்ச் கயானாவில் இருந்த விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டிஅணைத்து தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதேபோல், இஸ்ரோவில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்குள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
சுமார் 2,600 கிலோ எடையுள்ள ஜிசாட்-31 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் வரை இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் பெருநிலப் பகுதி மற்றும் தீவுகளில் உள்ள நிலப்பரப்பில் இணையத் தொடர்புக்கு உதவும் வகையில் ஜிசாட் - 31 செயற்கைக் கோளில் மல்டி - ஸ்பாட் பீம் ஆண்டெனா பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விசாட் நெட்வொர்க், தொலைக்காட்சி சேவைகள், டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டிடிஹெச் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றை அதிவேகத்தில் பெற முடியும் என்றும், அகண்ட அலைவரிசைக்கான இன்றியமையாத சேவையை வழங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், அடுத்த தலைமுறை செயலிகளை செயல்படுத்துவதற்கான தளத்தை ஜிசாட்-31 செயற்கைக்கோள் அமைத்துக் கொடுக்கும் வகையில், இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பர் 5ம் தேதி 5,854 கிலோ எடை கொண்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோள் கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இஸ்ரோவின் 40வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஜி-சாட் 31 ஹைலைட்ஸ்
* தகவல் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் ஜி-சாட் 31 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.
* ஏடிஎம் சேவை, பங்கு சந்தை உள்ளிட்ட பல இ-சேவைகள் துரிதமாக கிடைக்கும்.
* விசாட் நெட்வொர்க், தொலைக்காட்சி சேவை, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டிடிஹெச், செல்போன் சேவை வேகம் அதிகரிக்கும்.
* நாட்டை சுற்றியுள்ள பெருங்கடல்கள் மற்றும் தீவுகளின் நிலப்பரப்பு குறித்த தகவல்களையும் அளிக்கும்.
40வது செயற்கைக்கோள்
இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் கூறுகையில், ''ஜிசாட் - 31 செயற்கைகோள் ஓர் தனித்துவமான கட்டமைப்பு கொண்டிருக்கிறது. இந்த செயற்கைக்கோள், இந்திய நிலப்பகுதி மற்றும் தீவுகளுக்கு தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும். தகவல் தொடர்பு வசதிக்காக நாட்டின் 40வது செயற்கைகோளாகும். 2,535 கிலோ எடைெகாண்ட இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். விசாட் பேங்கிங், பேரிடர் மேலாண்மை, இ-சேவை, பங்குச்சந்தை தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் அடுத்த கட்டத்தை எட்டமுடியும்'' என்றார்.
Dailyhunt
No comments:
Post a Comment