Latest News

  

அம்மாவின் ராஜ விசுவாசி நான்! தினகரன் குழப்பம் ஏற்படுத்துகிறார் : ஓ.பி.எஸ்

அவர் கூறியுள்ளதாவது: சமுதாய கூட்டத்தில் பேசிய தினகரன் பெரிய பொய்யை கூறியுள்ளார்.திட்டமிட்டு தானே ஒரு பொய்யை உருவாகி என் பேருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி அவதூரு பரப்பி வருகிறார். இதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக பாஜாகவுடன் ஓபிஎஸ் கூட்டு சேர்ந்து கொண்டு செயல்படுவதாக கூறுயிருந்தார்.இதிலிருந்து குழப்பமான மனநிலைக்கு டிடிவி தினகரன் வந்துள்ளார் என்று தெரிகிறது. கேகேநகரில் 20000 ரூபாய் பணம் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல அடுத்த தேர்தலிலும் ஜெயிக்க வேண்டுமென திட்டம் தீட்டி வருகிறார், தான் நினைத்த காரியம் நடக்க விலை என்ற மனச்சுமையுடன் தங்க தமிழ் செல்வம் மூலம் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு முயற்சிகிறார்.தான் நினைத்த காரியம் நடக்கவில்லை என்ற விரக்க்தியில் இவ்வாறு செயல்படுகிறார். இது மாதிரி பொய் பேசி அம்மாவின் ஆட்சிக்கு எந்த குழப்பமும் நேரக்கூடாது எந்த இழுக்கும் வரக் கூடாது என்பதால் தினகரன் வதந்தி பரப்புவதை விரும்பாமல் எனக்கும் தினகரனுக்கும் பொதுவான ஒரு நண்பர்மூலம் தான் இந்த சந்திப்பு நடந்தது.ஆனால் எந்த காலத்திலும் பதவி மீது எனக்கு ஆசை இல்லை. என்னல் ஆட்சி கவிழாது என்று ஏற்கனவே நான் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறிவிட்டேன். பிறகு எங்கள் ஆட்சியை நாங்களே எப்படி கவுழ்க்க முடியும் ? இந்த சந்திப்பின் போது மனம்திருந்தி விடுவார் என்று நினைத்து, அதுவும் தினகரன் கேட்டுக் கொண்டதால்தான் அவரை சந்தித்து பேசினேன்.இத்தனைக்கும் இந்த சந்திப்பு தர்மயுத்தம் நடந்து கொண்டிருந்தபோது நடைபெற்றது.பல்வேறு தயக்கங்களுக்கிடையேதான் இந்த சந்திப்புக்கு நான் ஒப்புக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் என்பெயரைக் கெடுக்கவே அவர் துடிக்கிறார் . ஆனால் எனக்கு எந்த காலத்திலும் பதவி ஆசை இருந்தது இல்லை .நான் ஏற்கனவே மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன் அந்த திருப்தியே எனக்கு போதும். முன்னாள் முதலமைச்சர் அம்மாவுக்கு நான் ராஜவிசுவாசியாக இருந்தேன். இனியும் இருப்பேன்.

இதற்கு நேர்மாறாக அரசைக் கவிழத்து விட்டு குறுக்கு வழியிலேயே ஆட்சியைக் கைப்பற்றுவதிலேயே குறியாக உள்ளர் டி.டி.வி.தினகரன். அவருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் என்னிடம் இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதனால் இத்தனை குழப்பங்களை விளைவித்து, அம்மா ஆட்சிக்கு களங்கம் விளைவிக்குன்ம் தினகரன் குடும்பத்துடன் இனி எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று துணைமுதல்வர் இன்று தனது இல்லத்தில் பேசினார். அவருடன் உதயகுமார் மற்றும் ம.ஃ.பா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.