சிரியா முகாம்களில் ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில்
பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்ததாக
கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஐன் எல் தினா பகுதியில் ரஷ்ய
படைகள் வான்வழியாக குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்த
தாக்குதல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகையில் "
தொடர்ந்து சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் காரணமாக ஐன் எல் தினா
கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பொதுமக்கள் தங்கியுள்ளனர். அவர்கள் தங்கி
உள்ள முகாம்கள் மீது ரஷ்ய படைகள் இன்று வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில்
அப்பகுதியில் இருந்த 10 பேர் இறந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டது.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர்
ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும்
இடையே கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர்
ஆசாத்துக்கு உதவியாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில்
அவ்வபோது அமெரிக்க படைகளும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ரசாயன
ஆயுதங்களை அழிப்பதற்கு கடந்த 3 மாதங்களாக அமெரிக்க படைகள் முகாம்களை
அமைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வாரம் அமெரிக்க படைகள்
நடத்திய வான்வழி தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட அப்பவி மக்கள்
கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். தொடர்ந்து சிரிய அரசுக்கு எதிராக
நடந்து வரும் தாக்குதல்களால் இதுவரை 3,50,000 அப்பாவி மக்கள்
கொல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment