மதுரை பசுமலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஐஸ்வர்யாவை அழைத்துக்
கொண்டு அவரது தந்தை கண்ணன் சிவகங்கை சிங்கம்புணரியில் உள்ள தனது
வீட்டிற்கு செல்லும்போது நெஞ்சுவலியால் மரணடமடைந்துள்ளார்.
இந்த
முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில்
தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு
எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாராடைப்பு காரணமாக மரணம்
அடைந்துள்ளார்.
இன்னும் சில மணிநேரத்தில் அவரது உடல் சொந்த ஊரில்
அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டஉள்ளது. இந்த நிலையில் தற்போது
இதேபோல் இன்னொரு மோசமான சம்பவமும் நடந்துள்ளது.
மதுரை பசுமலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஐஸ்வர்யாவை அழைத்துக்
கொண்டு அவரது தந்தை கண்ணன் சிவகங்கை சிங்கம்புணரியில் உள்ள தனது வீட்டிற்கு
செல்லும்போது நெஞ்சுவலியால் மரணமடைந்துள்ளார். வரும்போது ஏற்பட்ட திடீர்
நெஞ்சு வலி காரணமாக இவர் மரணம் அடைந்தார்.
இவரது உடல் இப்போது
மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது. ஒரே நாளில்
அடுத்ததடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி
உள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment