
பாட்டியாவில்
நேற்று நடந்த தேசிய சினியர் தடகள போட்டியில் தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி
400 மீட்டர் தடை ஒட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த
மார்ச்-5ம் தேதி முதல் பாட்டியாவில் 22-வது பெட்ரேஷன் கோப்பை தேசிய சீனியர்
தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 400 மீட்டர் தடை
ஒட்ட போட்டியில் தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த போட்டியின் மூலம் அவர் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மேலும், இந்த போட்டியில் இவர் 49.45 வினாடியில் பந்தயத்தை முடித்து தேசிய
அளவில் புதிய சாதணையை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment