
புதுடில்லி : வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா
ஆகியவற்றின் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (மார்ச் 03)
எண்ணப்பட்டு வருகின்றன. வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.,வின் செல்வாக்கு
வளர்ந்துள்ளதற்கு மோடியின் சாசனையே காரணம் என பா.ஜ., தலைவர் அமித்ஷா
கூறியுள்ளார். திரிபுராவில் பிப்., 18 ம் தேதியும் , நாகாலாந்து மற்றும்
மேகாலயாவில் பிப்.,27 ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
திரிபுராவில் 59 இடங்களுக்கும், நாகாலாந்தில் 60 இடங்களுக்கும்,
மேகாலயாவில் 59 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள்
இன்று காலை 8 மணிக்கு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மேகாலயாவில் கடந்த 10
ஆண்டுகளாக காங்., நடைபெற்று வருகிறது.
திரிபுராவில் இடதுசாரி கட்சி ஆட்சியும், நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி
கட்சி ஆட்சியும் நடந்து வருகிறது.திரிபுரா மற்றும் நாகாலாந்தில் கூட்டணி
கட்சிகளுடன் இணைந்து பா.ஜ., தேர்தலை சந்தித்துள்ளது. மேகாலயாவில் தனித்து
போட்டியிட்டது. திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் எனவும்,
மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய
கருத்துகணிப்புக்கள் தெரிவித்தன.நிலவரம் : திரிபுராவில் பா.ஜ., ஆட்சி
அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்றுள்ளது. நாகாலாந்தில் பா.ஜ., கூட்டணி
முன்னிலையில் உள்ள
து. மேகாலயாவில் காங்., முன்னிலையில் உள்ளது.
திரிபுரா :இடதுசாரிகள் - 18பா.ஜ., கூட்டணி -41காங்., - 0மற்றவை -
0நாகாலாந்து : என்பிஎப் - 25பா.ஜ., கூட்டணி - 30மற்றவை -5காங்., - 0மேகாலயா
:காங்., - 20என்பிபி - 19பா.ஜ., - 2மற்றவை -18
No comments:
Post a Comment