
தேவதானப்பட்டி : தேனிமாவட்டம் குள்ளப்புரத்தில் நெற்பயிர்கள் நீரின்றி
காய்ந்து வரும் வேதனையில் விவசாயி கருப்பணன்,70,க்கு மாரடைப்பு
ஏற்பட்டது.தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தில் பெரியகண்மாய் உள்ளது. வராக
நதியில் இருந்து இதற்கு தண்ணீர் வருகிறது. இதன் நீரை ஆதாரமாக கொண்டு
ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த
அக்டோபர், நவம்பரில் பெய்த மழையால் கண்மாய் நிரம்பியது. இதன் மூலம் நுாறு
ஏக்கரில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு செய்து 55
நாட்கள் ஆன நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால்
நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.குள்ளப்புரத்தைச் சேர்ந்த விவசாயி
கருப்பணன், நீர் பாய்ச்ச நேற்று வயலுக்கு சென்றார்.
கண்மாயில் இருந்து பானத்திற்காக நீர் திறக்கப்படவில்லை. இதனால்
காய்ந்துவரும் நெற்பயிர்களை பார்த்து வேதனையடைந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு
தரையில் சாய்ந்து மயங்கினார். மற்ற விவசாயிகள், அவரை மீட்டு தேனி
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
.நன்றி : dailyhunt.in
No comments:
Post a Comment