தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்று சென்னை காமராஜர் அரங்கத்தில் வைரமுத்து உரையாற்றி இருக்கிறார்.
தனியார்
பத்திரிக்கை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து
பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக பேசிவிட்டதாக சர்ச்சை
எழுந்தது. இதற்கு தமிழகம் முழுக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த
நிலையில் தற்போது சென்னை காமராஜர் அரங்கத்தில் வைரமுத்து உரையாற்றி
வருகிறார். இதில் வைரமுத்து மறைமலையடிகள் குறித்த கவிஞர் வைரமுத்துவின்
'தமிழாற்றுப்படை' கட்டுரையை அரங்கேற்றம் செய்கிறார்.
இதில் பேசிய வைரமுத்து ''தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
அதிகார மையங்களில் இருந்து தமிழ் ஆள வேண்டும் '' என்றார்.
மேலும்
''நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு
தயங்குகிறது.வடமாநிலங்களில் இந்தியில் தீர்ப்பு சொல்லும்போது இங்கு தமிழில்
சொன்னால் ஆகாதா?'' என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
source: oneindia.com

No comments:
Post a Comment