10 வயதுச் சிறுமியிடம் பாலியல்
தொந்தரவு அளிக்க முயன்ற 66 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
திருப்பூர்
மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் சுப்பன். வயது 66. இவர், கடந்த 2016 - ம்
ஆண்டு ஜூலை மாதம் எலையமுத்தூர் என்ற பகுதியில் ஆடு
மேய்த்துக்கொண்டிருந்தபோது, அந்த இடத்திலிருந்து சற்று தள்ளி, 10 வயது
சிறுமி ஒருவர் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றுள்ளார். அதைக்கண்ட சுப்பன்,
வேகமாக அந்தச் சிறுமியிடம் சென்று, அவரை அருகிலிருந்த காட்டுப் பகுதிக்கு
இழுத்துக்கொண்டுபோய், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றிருக்கிறார்.
அப்போது அச்சிறுமி சத்தம்போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று சிறுமியை
மீட்டிருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து உடுமலை மகளிர் காவல்துறையினர் சுப்பனை கைது செய்து, அவர்மீது குழந்தைகள் பாலியல் குற்றப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. சுப்பனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து அனைத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

.நன்றி : dailyhunt.in
No comments:
Post a Comment