சட்டப் பேரவையில் வாய்ப்பு வந்தால் நம்பிக்கை இல்லாத்தீர்மானம்
கொண்டுவருவோம் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக
சட்டப் பேரவை நாளை கூடவுள்ளது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால்
ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. நாளை சட்டப்பேரவை கூடநிலையில், இன்று
தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள்
கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தில்
செயல்படுவது குறித்து எம்.எல்.ஏக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏக்கள்
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
'எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், குட்கா விவகாரம் உள்ளிட்ட வழக்குகள்
நிலுவையில் உள்ளன.
சட்டப் பேரவையில் வாய்ப்பு கிடைத்தால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
கொண்டுவரப்படும்' என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment