கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட
லாலுவுக்கு சிறையில் தோட்ட வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால விசாரணை
முடிந்து ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை
விதித்து நேற்று தீர்ப்பளித்தது.சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாலு அவரது
டுவீட்டரில்; "பா.ஜ.,கொள்கைகளை பின்பற்றி வாழ்வதை விட சிறையில் சாவதே
மேல், சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் " என கூறியிருந்தார்.
அவரது மகன் தேஜஸ்வி மேல் முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளார். மேலும்
அவரது குடும்பத்தினர் சிறை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு சிறையில் தோட்ட வேலை செய்ய
பணிக்கப்பட்டுள்ளார்.
காலை 9 மணி முதல் 3 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் தோட்ட வேலை செய்ய
வேண்டும். இதற்கு அவருக்கு ஒரு நாளைக்கு 93 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

No comments:
Post a Comment