பொதுமக்களுக்காக காஞ்சிபுரத்தில் டாய்லெட் கட்டிய த்ரிஷா
காஞ்சிபுரம் : தென்னிந்தியத் திரையுலகில், பல சிறந்த நடிகைகள் ஐந்தாறு
வருடங்களுக்குள் மார்க்கெட் அவுட் ஆகி காணாமல் போகும் நிலையில் 15
ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா.
நடிகை த்ரிஷா சமீபத்தில் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்
செய்யப்பட்டார். அதில் இருந்தே அவர் தனது சமூக சேவைகளைப் பணிகளை
விரிவுபடுத்திக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் அருகில் உள்ள வட நெமிலி என்ற
கிராமத்திற்கு சென்று கழிப்பறை கட்டுவதில் உதவி புரிந்து விழிப்புணர்வு
ஏற்படுத்தி இருக்கிறார்.

நடிகை த்ரிஷா
15 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா
அடிப்படையில் செல்லப்பிராணிகள் மீது மிகுந்த நேசத்துடனும் மக்களுக்கும்
தொண்டு செய்வதையே தன் வாழ்க்கை லட்சியமாகவும் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

உடல் உறுப்பு தானம்
த்ரிஷா தனது 30-வது பிறந்தநாள் அன்று உடல் உறுப்பு தானம் செய்து, தன் சமூக
அக்கறையை இன்னும் அழுத்தமாகப் பதிந்தார். இவர் சமீபத்தில், தமிழகம் மற்றும்
கேரள மாநிலங்களுக்கான குழந்தைகள் உரிமைக்கான யுனிசெஃப் தூதராக
நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் த்ரிஷா
இந்நிலையில்
காஞ்சிபுரம் மாவட்டம் வட நெமிலி என்ற கிராமத்திற்கு சென்ற த்ரிஷா,
அங்குள்ள பொதுமக்களைச் சந்தித்து, கழிப்பறையின் அவசியம் குறித்தும்,
கழிப்பறை இல்லாததால் ஏற்படும் சுகாதாரக்கேடு மற்றும் பிரச்சனைகள்
குறித்தும் விளக்கியுள்ளார்.
கழிப்பறை கட்டிய த்ரிஷா
பின்னர்
கழிப்பறை மாதிரி ஒன்றைக் கட்டி காண்பித்த நடிகை த்ரிஷா, அந்தப் பகுதி
மக்களின் தேவைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இதர வசதிகள்
குறித்தும் கலந்துரையாடி அறிந்து கொண்டார்.
திரும்ப வருவாராம்
மிக
விரைவில் அதே கிராமத்திற்கு மீண்டும் வருகை தருவதாகவும், அப்போது அந்த
கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க தான் ஏற்பாடு செய்வதாகவும்
தெரிவித்துள்ளார். த்ரிஷா களத்தில் இறங்கி சமூக சேவையில் ஈடுபட்டு வருவதை
பலர் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment