டெல்லியில் சிகிச்சை பெறும் பாகிஸ்தானிக்கு, சிறுநீரக தானம்
அளிக்கவுள்ள மற்றொரு பாகிஸ்தானிக்கு மருத்துவ விசா வழங்கப்படும் என்று
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் பாய்ஸா மாலிக். இவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ட்விட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் பாய்ஸா கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் பாய்ஸா மாலிக். இவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ட்விட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் பாய்ஸா கூறியிருப்பதாவது:
எனது உறவினர் பராஸ் மாலிக், டெல்லி போர்ட்டிஸ் மருத்துவமனையில்
சிகிச்சை பெறுகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய
வேண்டியுள்ளது. அதற்காக சிறுநீரக தானம் அளிக்க ஒப்புக் கொண்டவரை டெல்லி
மருத்துவமனைக்கு அனுப்பினோம். ஆனால், அவருடைய சிறுநீரகம் ஒத்துபோகாது
என்று மறுத்துவிட்டனர்.
தற்போது 2-வதாக சிறுநீரக தானம் அளிக்க
முன்வந்துள்ள அப்துல் ரசாக் என்பவருக்கு மருத்துவ விசா கிடைக்க உதவி செய்ய
வேண்டும். இவ்வாறு பாய்ஸா கூறியிருந்தார்.
அதற்கு வெளியுறவுத் துறை
அமைச்சர் சுஷ்மா அளித்துள்ள பதிலில், ‘‘தயவுசெய்து கவலைப்படாதீர்கள்.
சிறுநீரக தானம் அளிக்க முன்வந்துள்ள 2-வது நபருக்கு மருத்துவ விசா வழங்க
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திடம் பேசியிருக்கிறேன்’’ என்று
தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சினைகள்
நிலவி வந்தாலும், மருத்துவ காரணங்களுக்காக விசா கேட்டால்
தகுதியுள்ளவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று அமைச்சர் சுஷ்மா உறுதி
அளித்திருந்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் இருந்து
பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா உடனுக்குடன் வழங்கப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது.
- ஐஏஎன்எஸ்
No comments:
Post a Comment