ஈரான் - இராக் எல்லையோரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 338-ஆக அதிகரித்துள்ளது.
ஈரான்
- இராக் ஆகிய நாடுகளின் எல்லையோரத்தில் இன்று (திங்கட்கிழமை) சக்தி
வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர்
அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம்
அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது குர்திஸ்தான்
மாகாணத்தின் சுலைமானியா பகுதியில் பெஞ்வின் எனுமிடத்தில் நிலை
கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''ஈரான் - இராக்
எல்லையோரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 338 பேர்
பலியாகினர். 3,950 பேர் காயமடைந்துள்ளனர். மலைப் பிரதேசங்களில் மீட்புப்
பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில்
கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 26,000 பேர்
பலியாகினர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக இது
பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment