ஆஸ்திரிய நாட்டின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற 31 வயதான செபாஸ்டியன் குர்ஸ், உலகின் இளம் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
இவர் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சிக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் குர்ஸின் மக்கள் கட்சி 31.5%
இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பெற்றது. அடுத்ததாக சமூக ஜனநாயகக் கட்சி
26.9% இடங்களைப் பிடித்துள்ளது. ஐரோப்பிய யூனியனைக் கடுமையாக விமர்சித்து
வரும் சுதந்திரக் கட்சி 26% இடங்களைப் பெற்றது.
இதுகுறித்துப்
பேசிய செபாஸ்டியன், ''நான் புதிய அரசியல் கலாச்சாரத்தை விரும்புகிறேன்.
அதன்மூலம் தைரியமும் உறுதியும் மிக்க ஆஸ்திரிய அரசாங்கத்தை அமைக்க
ஆசைப்படுகிறேன்'' என்றார்.

No comments:
Post a Comment