உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி காதல் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மதுரையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்தவர்கள் ஆணவ கொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவின் பேரில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் காவல் துணை ஆணையர், சமூகநல அதிகாரி, ஆதிதிராவிட நல அதிகாரி ஆகியோர் மேற்பார்வையில் இந்த சிறப்பு தனிப்பிரிவு செயல்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இந்த தனிப்பிரிவு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்பவர்கள் அச்சுறுத்தல் காரணமாக அளிக்கும் புகாரை விசாரிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கலப்பு திருமணம் செய்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை அளிக்க 0452 - 2346302 என்ற தொலைப்பேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment