ஆந்திரா-தமிழகம் எல்லையில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயி ஒருவரை நக்சலைட்டுகள் மிரட்டியாக வெளியான தகவலை தொடர்ந்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தின் வாணியம்பாடி மற்றும் ஆந்திராவின் குப்பம் போலீசார் இணைந்து எல்லையில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
காடுகளில் ரோந்து செல்லும் போலீசார், சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். நக்சலைட்டுகள் ஊடுருவியதாக வெளியாகியுள்ள தகவல்களால் இரு மாநில எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment