பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பாதுகாப்பு வாகனம் மீது கல் வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி காரில் வைஷாலி மாவட்டத்தில் சென்றபோது அவரது பாதுகாப்பு வாகனம் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதலில் நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வீச்சில் ஈடுபட்டது லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி பிரமுகர்கள் என்று சுஷில்குமார் மோடி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் காரில் சென்றபோது அவரது பாதுகாப்பு வாகனம் மீது கல் வீசப்பட்டது. இதில் பாதுகாப்பு வாகன கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.

No comments:
Post a Comment