பாகிஸ்தான் அமைச்சரவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மதத்தை
சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பனாமஸ் பேப்பர்ஸ் ஊழலில் சிக்கியதையடுத்து
அவர் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து புதிய பிராதமரகா ஷாகித் ககான்
அப்பாஸி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.
நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷாபாஸ் எம்பியாகும் வரை அப்பாஸி இடைக்கால
பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிராதமர் அப்பாஸி
65 வயதான தர்ஷன் லால் என்ற இந்து மதத்தை சேர்ந்த ஒருவரை அமைச்சராக
அறிவித்துள்ளார்.
தர்ஷன் லால் மருத்துவர்
சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கரி மாவட்டத்தில் தர்ஷன் லால் மருத்துவராக
பணிபுரிந்து வருகிறார். லால் 2013ஆம் ஆண்டு சிறுபான்மையினருக்கான
கோட்டாவில் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு
தர்ஷன் லால் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சரவையில் இடம்
பெறும் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சராவார். பிரதமர் அப்பாஸி தலைமையிலா
அமைச்சரவையில் 47 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பதவி பிரமாணம்
அவர்களில் 28 பேர் மத்திய அமைச்சர்களாகவும் 19 பேர் இணைய அமைச்சர்களாகவும்
நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன்ஹுசைன் பதவி
பிரமாணம் செய்து வைத்தார்.
நவாஸின் நண்பரருக்கும் இடம்
அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள இஷக் தர்
நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரிப்பின் நெருங்கிய நண்பரான
கவாஜா ஆசிப் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல்
முன்னதாக இவர் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். 2018ஆம் ஆண்டு
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே அமைச்சரவை
அமைக்கப்பபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment