பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் பணத்தை
லஞ்சமாக கொடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
இந்த நிலையில், சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்தில் சட்ட
பஞ்சாயத்து இயக்கம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவின் கோரிக்கைகள்
பரிசீலிக்க தக்கதா என்பதை ஆய்வு செய்து, உச்சநீதிமன்றம் இதில்
முடிவெடுக்கும்.
இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் சிலருடன் பேசினோம். அவர்கள் கூறியது இதுதான்
பாதுகாப்பு முக்கியம்
சசிகலா ஒரு பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் என்பதால் விஐபி கைதி. அவரின்
பாதுகாப்புக்கு நீதிமன்றமும், கர்நாடக மாநில அரசும் முன்னுரிமை கொடுக்கும்.
அதன் அடிப்படையில்தான் கர்நாடகாவிலேயே அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்க நீதிமன்றமும் அரசும்
முடிவெடுத்தன.
எளிதில் சம்மதிக்காது
பாதுகாப்புமிக்க பெங்களூர் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்ற
வேண்டுமானால், பெங்களூர் சிறையில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளனவா என்ற
தகவலை கோர்ட்டில் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஒருவேளை அரசு
நியமித்துள்ள உயர்மட்ட கமிட்டி சிறையில் ஆய்வு செய்து, சிறையில்
விதிமுறைகள் மீறப்படுகின்றன என்று அறிக்கையளித்தால்தான் அதை உறுதியான
ஆதாரமாக சுப்ரீம் கோர்ட் கருத்தில் கொள்ளும். பிறகுதான் சிறையை மாற்ற
அனுமதிக்க வாய்ப்புள்ளது. அதிலும்கூட, பெங்களூர் சிறை பாதுகாப்பு குறைபாடு
தீர்க்கப்பட்டுவிட்டதாக கர்நாடக அரசு கூறுமானால் அதையும் கோர்ட் கருத்தில்
எடுக்க வாய்ப்புள்ளது.
தும்கூர் முதல் சாய்ஸ்
ஒருவேளை பெங்களூர் சிறையிலிருந்து சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற
வேண்டுமானால் கர்நாடகாவிலுள்ள பெங்களூர் தவிர்த்த பிற 7 மத்திய சிறைகளில்
ஒன்றில் அவரை அடைக்கச் செய்யலாம். அதில் தும்கூர் முதலிடம் பிடிக்கும்.
பெங்களூரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலுள்ள தும்கூர் நகரில்
பெண்களுக்கான பிரத்யேக மத்திய சிறைச்சாலை உள்ளது. சமூக சேவகர் டிராபிக்
ராமசாமி, கர்நாடக ஹைகோர்ட்டில் முன்பு ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
சசிகலாவை தமிழகத்தை சேர்ந்த ஆளும் கட்சி விஐபிகள் சிறையில் அடிக்கடி
சந்திப்பதால் தும்கூர் சிறைக்கு அவரை மாற்ற கோரிக்கைவிடுத்திருந்தார்.
மொத்தம் 7 சிறைகள்
தும்கூர் தவிர, தார்வாட், மைசூர், குல்பர்கா, பிஜாப்பூர், பெல்லாரி,
பெல்காம் ஆகிய நகரங்களிலும் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒரு
சிறைச்சாலைக்கு சசிகலா மாற்றப்படலாம். அதேநேரம், திகார் சிறைச்சாலைக்கோ,
தமிழகத்திலுள்ள சிறைச்சாலைகளில் ஒன்றுக்கோ சசிகலா மாற்ற
தமிழகத்திற்கு வாய்ப்பு?
இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் மேலும் கூறுகையில், சசிகலா மீதான
சொத்துக்குவிப்பு வழக்கின் வரம்பு கர்நாடக நீதிமன்றம்தான். கர்நாடக
நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்ய கோரிதான் சசிகலா தரப்பு
உச்சநீதிமன்றம் சென்றது. அதிலும் தண்டனை உறுதியானது. இதில் தமிழக மாநில
வரம்பு வராது என்பதால், சசிகலா தமிழக சிறையில் மாற்றப்பட வாய்ப்பு இல்லை.
இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment