
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் 3,388 மீட்டர்
உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த குகைக்கோவிலில் உள்ள பனி
லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில்
நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு யாத்திரை செல்வது
வழக்கம். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 29–ந்தேதி தொடங்கியது.
கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த
நிலையில் நேற்று இரவு 8.20 மணி அளவில் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற
இடத்தில் நெடுஞ்சாலையில் போலீசார் வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது
பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பேர்
உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள்
தாக்குதலில் இருந்து 50 பயணிகளை துணிச்சலுடன் காப்பாற்றிய பஸ் டிரைவர்
சலீமுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில்
பயங்கரவாதிகள் தாக்குதலின் போது துணிச்சலுடன் பஸ்சை நிறுத்தாமல்
ஓட்டிச்சென்று யாத்ரீகர்களின் உயிர்களை காப்பாற்றிய பஸ் டிரைவர் ஷேக் சலீம்
கபாருக்கு காஷ்மீர் அரசு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment