ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவோம் என அதிமுக அம்மா அணி அவரிடம் உறுதியளித்திருப்பதாக மாஜி முதல்வர் ஓபிஎஸ் கூறினார். அத்துடன் பாஜகவினரைப் போல ராம்நாத் கோவிந்த்ஜி' என ஜி போட்டு ஓபிஎஸ் பேட்டியளித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சிதைந்து போய் கிடந்தாலும் பாஜகவை ஆதரிப்பதால் போட்டி போட்டு கொண்டு டெல்லிக்கு ஓடுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன் என அனைவருமே பாஜகவின் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் முகாமிட்டுள்ள ராம்நாத் கோவிந்த், அதிமுக கோஷ்டி எம்.எல்.ஏக்கள், எம்பிக்களை சந்தித்து பேசினார். இச்சந்திப்புகளைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் ஓபிஎஸ். அப்போது, ராம்நாத் கோவிந்த்ஜியை அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்தனர். இச்சந்திப்பின் போது அவருக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளோம். எந்த ஒரு நிபந்தனையும் இல்லாத ஆதரவை அவருக்கு தருவதாக கூறியிருக்கிறோம் என்றார். இதுவரை பாஜகவினர்தான் 'ஜி' என அழைத்து வந்தனர். இப்போது பாஜகவினராகவே ஆகிவிட்ட ஓபிஎஸ்-ம் ஜி போட்டு அழைக்க தொடங்கியுள்ளார். பாஜகவின் முதல்வர் வேட்பாளரே ஓபிஎஸ்தான் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் அவரது 'ஜி' பேச்சு புதிய சலசலப்பை கிளப்பியுள்ளது.

No comments:
Post a Comment