தமிழக அரசை விமர்சித்த விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த திமுக செயல்
தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் நன்றி
தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்து வருகிறார். அவரது இந்த
விமர்சனங்களுக்கு அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து
வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய வேண்டும் என
அமைச்சர் சி.வி. சண்முகமும் மிரட்டல் விடுத்திருந்தார். அமைச்சர்களின் இந்த
மிரட்டலுக்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினின் அறிக்கை வெளியான உடனேயே கமல்ஹாசன் தம்முடைய ட்விட்டர்
பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு போட்டுள்ளார்.

No comments:
Post a Comment