அவசரக் காலங்களில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விமானங்கள் தரையிறங்க இந்திய விமானப் படை அனுமதி வழங்கியுள்ளது.
விமானங்கள் வானில் பறக்கும் போது ஏற்படும் அசாதாரண சூழல் ஏற்பட்டால், அருகில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்று தரையிறக்க வேண்டும்.
இதற்காக,
அருகில் இருக்கும் விமான நிலையத்தில் தகவல் சொல்லி முறையான அனுமதி பெற்று
விமானம் தரையிறங்குவதற்குள் பைலட், பணியாளர்கள், பயணிகள் என அனைவருக்கும்
உயிர் போய் உயிர் வந்துவிடும்.
சாலையோரங்களில் விமானம்
இதுபோன்ற
சங்கடங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், அவசரக் காலங்களில் உடனடியாக
விமானத்தை தரையிறக்க இந்திய விமானப் படை சில திட்டங்களை வகுத்துள்ளது. அந்த
வகையில் நெடுஞ்சாலைகளில் விமானத்தை இறக்கும் புதிய முறைக்கு விமானப் படை
அனுமதி வழங்கியுள்ளது.
சாலையோரங்கள் மாற்றும் திட்டம்
அவசரக்
காலங்களில் விமானங்கள் சாலையோரங்களில் தரையிறங்க இந்திய விமானப்படை அனுமதி
வழங்கியுள்ளது. இதனையடுத்து விமானங்கள் தரையிறங்கும் வகையில் சாலையோரங்கள்
மாற்றி அமைக்கப்பட உள்ளன.
ஈசிஆரில் விமானம் தரையிறக்கம்
மீட்புப்
பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில் விமானங்கள் தரையிறங்க அனுமதி
வழங்கியது இந்திய விமானப் படை. அந்த வகையில் சென்னை - புதுச்சேரி இடையிலான
கிழக்கு கடற்கரைச் சாலையில் அவசரக் காலங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
11 நெடுஞ்சாலைகளில் விரிவு
ஏற்கனவே
டெல்லி - ஆக்ரா நெடுஞ்சாலையில் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை
செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 11 இடங்களில் உள்ள
நெடுஞ்சாலைகளில் விமானங்களை இறக்க இந்திய விமானப் படை அனுமதி
வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment