பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வெளியில் சுற்றிவிட்டு
மீண்டும் சிறைக்குத் திரும்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலாவும்
இளவரசியும் சிறைத்துறை அதிகாரி ஒருவரின் காரில் அவ்வப்போது ஊர் சுற்றி
வருவதாக புகார் எழுந்தது. அதனை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து வந்தனர்.
இந்நிலையில் சிறை வளாகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் ஒவ்வொன்றாக
வெளியாகி வருகிறது. இது கர்நாடக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சுடிதாரில் வெளியே செல்லும் சசி
சசிகலா கைதிக்கான உடையை அணியாமல் நைட்டியுடன் வலம் வரும் வீடியோ வெளியானது.
அந்த பீதி அடங்குவதற்குள் சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு சிறையில் இருந்து
வெளியே சென்றுவிட்டு திரும்பும் வீடியோ வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இளவரசியும் செல்லும் வீடியோ
மேலும் தோளில் ஹேன்ட் பேக்கை மாட்டிக்கொண்டு ஒய்யாரமாக செல்லும் சசிகலாவின்
பின்னால் இளவரசியும் செல்வது அந்த காட்சியில் தெரிகிறது. இதன்மூலம்
சசிகலாவும் இளவரசியும் ஒரு கைதி போல சிறையில் நடத்தப்படவில்லை என்பது
உறுதியாகியுள்ளது.
பெருந்தொகை செலவழிப்பு
மேலும் டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டுபோல் இந்த ஏகபோக வாழ்க்கையை சிறையில்
அனுபவிக்க சசிகலா தரப்பு ஒரு பெருந்தொகையை செலவிட்டிருப்பதும்
ஊர்ஜிதிமாகியுள்ளது.

சசிகலா மாற்றம்?
சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் அளித்த சலுகைகள் அனைத்தும் ஆதாரப்பூர்மாக
நிரூபிக்கப்பட்டுள்ளதால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
அரசின் மீதுள்ள நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்வதற்காக சசிகிலாவை விரைவில்
வேறு சிறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment