பாவனா கடத்தல், பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கைதான
நடிகர் திலீப்புடன் போலீசார் எடுத்த செல்ஃபி வைரலாகப் பரவி வருகிறது.
பாவனா வழக்கில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார் பிரபல நடிகர் திலீப்.
அவரைக் கைது செய்த போலீஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது. அப்போது
உடன் வந்த போலீசார் இருவர் திலீப்புடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
திலீப்பும் மறுப்பு சொல்லாமல் சோகப் புன்னகையுடன் அவர்களுடன் செல்ஃபி
எடுத்துக் கொண்டார் திலீப்பும்.
இந்த செல்ஃபி படம்தான் இப்போது வலைத் தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
இன்னொரு பக்கம், 'அவரே பிரச்சினையில் இருக்கிறார். அவர் மனநிலை புரியாமல்
ஒரு காட்சிப் பொருள் போல நிறுத்தி செல்ஃபி எடுப்பது என்ன மாதிரி மனநிலை'
என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment