Latest News

அதிமுகவில் மற்றொரு விரிசல்.. அதிகாரப்பூர்வமாக உருவானது மேலும் ஒரு அணி!

 சப்ஜெக்ட்டுக்கு அசைவு இல்லை
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உடைந்து சுக்குநூறாகிப்போனாலும், அதிகாரப்பூர்வமாக இப்போது எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரு அணிகள்தான் உள்ளன. ஆனால், மற்றொரு அதிர்ச்சியாக இப்போது 3வது அணி உருவாகியுள்ளது. சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டே நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன் வைத்து பன்னீர்செல்வம் அணி முஷ்டியை தூக்கியபடி அலைகிறது. மற்றொரு பக்கம், சுற்றி நடப்பது எதுவுமே தெரியாமல், "நான் எங்க இருக்கேன்.." என மயக்கத்தில் இருந்து தெளிந்ததும் கேட்கும் சினிமா ஹீரோயின்கள் 'மோடில்' சுற்றி வருகிறது எடப்பாடி கோஷ்டி.

இரு கோஷ்டிகளும் ஜாலி இவ்விரு கோஷ்டிகளுமே, தாராளமாக தங்கள் பணிகளை பார்த்தபடிதான் உள்ளனர். எடப்பாடியார் மேட்டூர் அணையை தூர்வாரிக்கொண்டிருக்கும் நேரத்தில், பன்னீர்செல்வம் ஊர் ஊராக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சப்ஜெக்ட்டுக்கு அசைவு இல்லை ஆனால் அவ்வப்போது இரு தரப்புமே, கீறல் விழுந்த ரெக்கார்டர் போல, பேச்சுவார்த்தை நடக்கும், தொடரும், இதோ தொடங்கிவிட்டது.. என்று மட்டும் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள். மற்றபடி எந்த அசைவுமே இல்லை. குடுமிப்பிடி சண்டைகளும் இல்லை.

கதையின் டிவிஸ்ட் ஆனால், கதை அப்படியே விக்ரமன் படம்போல போனால் சுவாரசியம் இருக்காதல்லவா. கதையில் டிவிஸ்ட் வேண்டும் என நினைக்கும்போது ஒரு கேரக்டரை உள்ளே அனுப்பும் சினிமா இயக்குநரை போன்றுதான் இறைவனோ அல்லது இயற்கையோ இப்போது டிடிவி தினகரனை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே அனுப்பியுள்ளது.

பதிலடிகள் தினகரனும், வெளியே வந்ததும் முதல் வேளையாக நான் கட்சிப் பணியாற்றப்போகிறேன் என குண்டு போட, அவர் கட்சியில் இருக்கனுமா என்பதையே எடப்பாடிதான் சொல்ல வேண்டும் என பதிலுக்கு பாம் போட்டுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

மற்றொரு கோஷ்டி தினகரன் vs பன்னீர் என்ற நிலை திகார் காலத்தில் மாறிப்போய், தினகரன் vs எடப்பாடி என மாறியுள்ளது. அதிகாரத்தின் ருசி பார்த்த எடப்பாடி கோஷ்டி, தினகரனுக்கு பங்கு தர தயார் இல்லை. கிடைத்த வாய்ப்பை தினகரன் விடப்போவதில்லை. எனவே இனி இவ்விரு கோஷ்டியும் குடுமிப்பிடி சண்டை போடப்போவது உறுதி.

காமெடி கோஷ்டி நடுவே, திடீர் திடீரென தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சிப்பா... போன்று திரும்ப திரும்ப ஒரே டயலாக்கை கூறியபடி ஓ.பி.எஸ் அன்ட்கோவும் நகைச்சுவைக்கான பங்களிப்பை வழங்கும். எனவே இடைவேளை முடிந்துபோய் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதிமுக எனும் திரைப்படத்தின் 2வது பகுதியில் சுவாரசியங்களுக்கு பஞ்சமிருக்காது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.