தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் காசு சம்பாதிக்கலாம்... ஆனால் தலைமை பொறுப்பிற்கு யாரும் வரத் தேவையில்லை என்று இயக்குனர் பாரதிராஜா காட்டமாக தெரிவித்துள்ளார். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் 8 பேர் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது" திருமுருகன்காந்தி முதல்வர் சீட் கேட்டாரா நினைவேந்தல் கூட்டம் நடத்தியதற்கு எதற்காக குண்டர் சட்டம்" என்றார் ஒரு இனத்தை அழிக்க நடந்த முயற்சியை எடுத்துக் கூறவே நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ் மொழி, இனம், வீரம் துருப்பிடித்து விட்ட நிலையில் இது போன்ற கூட்டங்கள் அவசியம் தானே என கேள்வி எழுப்பினார் பாரதிராஜா.
படுக்கையில் பங்கு கேட்காதே தமிழகம் பிரிந்து கிடக்கிறது, வெட்டி குத்திக்கொண்டு கிடக்கிறது என்றால் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என் பெண்டாட்டிக்கு பிள்ளை இல்லை என்றால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் உனக்கு ஏன் அக்கறை. என் படுக்கையில் நீ பங்கு கேட்காதே.
தமிழன் தான் தலைவன் என் பெண்டாட்டிக்கு பிள்ளை ஊனமாக பிறக்கும் என்பதால் நீ வந்து பிள்ளை கொடுப்பாயா. தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும், யார் வேண்டுமானாலும் இங்கு வந்து பணம் சம்பாதிக்கலாம், ஏன் அரசியலுக்குக் கூட வரலாம் ஆனால் தலைமை தமிழனாகத் தான் இருக்க வேண்டும்.
தலையாட்டி பொம்மைகள் தமிழகத்தில் இரு அணிகளும் தலையாட்டி பொம்மைகளைப் போல உள்ளன. ஏதாவது ஒன்றாவது உருப்படியாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. திருமுருகன் மீதான வழக்கு தமிழக அரசின் சொந்த கருத்தில்லை யாரோ ஆட்டிவைப்பதற்கு ஆடும் கைப்பாவையாக உள்ளது என்று விமர்சித்துள்ளார் பாரதிராஜா.
இனப்படுகொலை ஏன் தெரியுமா? லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே ஏன் என்று தெரியுமா, தமிழர்களில் பலருக்கே தெரியாது. ஏன் அந்த சமயத்தில் அழலாமா வேண்டாமா என்று கூட யாருக்கும் தெரியவில்லை. இலங்கை இனப் படுகொலைக்காக ஆந்திரா, கர்நாடக மாநில மக்கள் அழுதார்களா? இதையெல்லாம் கேட்க வேண்டிய பொறுப்பு மீடியாக்களுக்கு உள்ளது.
மடியில் கனம் இல்லை எங்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஊடகத்தை பயன்படுத்தி நிச்சயம் இந்த அநியாயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் பயமில்லை, ஆனால் ஆட்சியாளர்கள் அப்படி இல்லை என்று விளாசினார் பாரதிராஜா.
No comments:
Post a Comment