அமெரிக்க கடற்படை விமானத்தை நடுவானில் சீன ராணுவ போர் விமானங்கள் இடை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெற்கு சீன கடற்பகுதியில் நடைபெற்றதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த வாரத்தில் இதுபோல சீனா அத்துமீறுவது இது இரண்டாவது முறை என்றும் அது குற்றம்சாட்டியுள்ளது. ஹாங்காங்கின் தென்கிழக்கு பகுதியில் 150 மைல் தொலைவிலுள்ள கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் ரோந்து விமானமான பி-3 ஓரியன் விமானம் சுற்றி வந்தது.
இடை மறித்த சீன போர் விமானங்கள் அப்போது, சீன போர் விமானங்கள் அதை இடை மறித்துள்ளன. இந்த இடைமறிப்பு என்பது ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்ததாக பென்டகன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இடை மறித்த சீன போர் விமானங்கள் அப்போது, சீன போர் விமானங்கள் அதை இடை மறித்துள்ளன. இந்த இடைமறிப்பு என்பது ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்ததாக பென்டகன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மெரிக்காவின் அத்துமீறல் இவ்வாரத்தின் தொடக்கத்தில், அமெரிக்க போர்க்கப்பல் தெற்கு சீன கடலில் சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவு பகுதியிலிருந்து 22 கி,மீ தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

சீனா
சந்தேகம் எனவே அமெரிக்கா மீது சீனாவுக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வளங்கள் நிறைந்த தெற்கு சீன கடல் பகுதியில் அமெரிக்கா ஆதிக்கம்
செலுத்தும் என சீனா சந்தேகிக்கிறது. ஏனெனில் அந்த பகுதிக்கு உரிமை
கொண்டாடுவதில் பிலிப்பைன்ஸ், வியட்னாம் மற்றும் மலேசியாவுடன் சீனாவுக்கு
மோதல் இருந்து வருகிறது.

கடந்த வாரம் கடந்த வாரம் சீனாவின் எஸ்யூ-3- வகை ஜெட் விமானங்கள் அமெரிக்க ரேடியேசன் கசிவு ஆய்வு விமானத்தை கிழக்கு சீன கடல் பகுதியில் இடை மறித்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment