மாடுகளின் கொம்புகளுக்கும் பெயிண்ட் அடித்தால் இனி சிறைவாசம் என சொல்கிறது மத்திய அரசு. இந்த புதிய தடையால் தமிழர்களின் பண்பாட்டு விழாவான மாட்டு பொங்கல் இனி கொண்டாட முடியாத நிலை உருவாகிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு திடீரென மாடுகள் மீது கரிசனம் காட்டுகிறது. மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்ததுடன் ஆடு, மாடு பலியிடலுக்கும் தடை விதித்துள்ளது. அத்துடன் மாடுகளின் கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்தாலும் கூட சிறைவாசம்தானாம். தமிழர்களின் பண்பாட்டு விழா பொங்கல் பண்டிகைகள்தான். காப்பு கட்டு, பொங்கல் திருநாள், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் இவைதான் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள்.
உறவுகள் ஒன்று கூடும் இந்த பொங்கல் திருவிழாவின் போதுதான் ஊரே ஒன்று சேரும். உறவினர்கள் ஒன்று சேரும் இந்த நாளில்தான் பல திருமணங்களுக்கான அச்சாரங்கள் அரங்கேறும்.

மாட்டு பொங்கல் மாட்டுப் பொங்கல் நாளில் மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் பூசி மாலை அணிவித்து அவற்றையும் தெய்வமாக கருதி பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. தமிழர்களின் செல்வமாக போற்றிப் பாதுகாக்கப்படும் மாடுகளை தெய்வங்களில் ஒன்றாக கருதியே இந்த திருவிழாவே நடைபெறுகிறது.

கட்சி கொடி நிறங்கள் அதுவும் அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் தங்கள் கட்சி கொடிகளின் நிறத்தை மாடுகளின் கொம்புகளுக்கு பூசி அழகுபார்க்கிற வழக்கம் தமிழகத்தில் இன்றளவும் இருக்கிறது. இதையொட்டியே ஏறுதழுவுதல் எனப்படும் சல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மாடுகளை துன்புறுத்துவதாக கூறி சல்லிக்கட்டுக்கு முதலில் தடை விதித்தனர்.

சல்லிக்கட்டு புரட்சி ஒட்டுமொத்தமாக தமிழகமே கிளர்ந்தெழுந்து சல்லிக்கட்டுப் புரட்சியை நடத்தியது. இதனால் சல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா தலைதெறிக்க தப்பி ஓடியது.

கொம்புகளுக்கு வர்ணம் பூச தடை இப்போது மாடுகள் வெட்ட தடை, விற்பனைக்கு தடை, எருமை மாடுகளை பலியிட தடை... அத்துடன் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசினாலும் சிறை என எதேச்சதிகாரமான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இத்தகைய உத்தரவால் தமிழர்களின் பண்பாட்டு விழாக்களில் ஒன்றான மாட்டு பொங்கல் கொண்டாட முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர். இது தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

No comments:
Post a Comment