9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 92.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வி துறை இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேர்வு
முடிவுகள் செல்போன்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி
பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது. இரு மாநிலங்களிலும்
6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு
எழுதினார்கள்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம், புதுச்சேரியில்
மொத்தம் 92.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை
விட அதிகமாகும். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
15ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை
அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம். மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற,
தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை
அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment