தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அதிரை அஹமத் ( வயது 69 ). தமிழ் இலக்கியங்கள் மீது அதிக பற்று கொண்ட இவர் எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர் ஆவார். சில ஆண்டு காலம் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று மகளிர் கல்விப்பணியை போதித்தவர். அனைவராலும் 'தமிழ்அறிஞர்' என அன்புடன் அழைக்கப்படுபவர்.
அதிரையின் மூத்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இஸ்லாம் ஓர் அறிமுகம், இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை, மழைப்பாட்டு (உரை), Wisdom in the Dawn (English), இளமைப் பருவத்திலே (Wisdom in the Dawn என்ற நூலின் மொழிபெயர்ப்பு), ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு (சிறுவர் மரபுக் கவிதைகள்), அரும்புப் பாட்டு (பதிப்பில்), பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்), ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்), இறையருட்கவிமணி மாலை (மரபுக் கவிதைகள்), அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன் பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் -1, பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் – 2,நபி வரலாறு, நம் பிள்ளைகளுக்கு, நபி வரலாறு (விரிவு), சல்மான் அல் ஃபாரிஸி ( மொழிபெயர்ப்பு ), அலீ பின் அபீதாலிபு,கப்பாப் இப்னுல் அறத்து ( மொழிபெயர்ப்பு ), அபூதர் அல்ஃகிஃபாரி. மிக்தாத் இப்னுல் அஸ்வத் (மொழிபெயர்ப்பு), இறைத்தூதர் முஹம்மத், வட்டியை ஒழிப்போம்! (மொழிபெயர்ப்பு), அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை), தொழுகையாளிகளே! (மொழிபெயர்ப்பு - மூலம்: அரபி), மொட்டுகளே மலருங்கள்! , கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை, நல்ல தமிழ் எழுதுவோம்!, ஈமான் – இஸ்லாம் கவி மலர்கள், நபி ( ஸல் ) வரலாறு, பேருபெற்ற பெண்மணிகள், மரபுக்கவிதைகள் உட்பட மொத்தம் 35 நூல்களை எழுதி உள்ளார்.
அதிரை சமுதாய நல மன்றம் – பத்தாம் ஆண்டு சிறப்பு மலர், ‘பிறை’ பத்திரிகை சார்பில் ‘அதிரை செக்கடிப் பள்ளி’ திறப்பு விழா மலர்,‘வேலூர் பாகியாத்துஸ் சாலிஹாத்’ நூற்றாண்டு விழா மலர், ‘சீறாப்புராணம்’ – நாச்சிகுளத்தார் வெளியீடு, அதிரை ஜீவரத்ன கவிராஜரின் ‘மழைப்பாட்டு’,. ‘அல்லாமா அப்துல் வஹ்ஹாப்’ நினைவு மலர், முத்துப்பேட்டை ‘அல் மஹா மலர்கள்’ ஆகியவற்றை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் மரபுக்கவிதை பலவற்றையும் எழுதி உள்ளார். பல நூல்களுக்கு வாழ்த்துரை வழங்கி உள்ளார்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கவிஞர் முடியரசன் தலைமைமையில் கவியரங்கம், சென்னை காயிதே மில்லத் அரங்கு மீலாதுக் கவியரங்கம், ‘கவிக்கோ’ தலைமையில் ‘பொதிகை’ தொலைக்காட்சியில் ‘ரமழான்’ கவியரங்கு, 1972 – முதலாம் இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடு, திருச்சி, 2007 - இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஏழாவது மாநாடு, சென்னை, 2010 - இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் 15 வது மாநாடு, அதிரை, 2011 - இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் எட்டாவது மாநாடு, காயல்பட்டினம் ஆகிய கருத்தரங்குகள், மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், காரைக்கால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் மாபெரும் மாநாடு எதிர்வரும் ஏப்-1, 2 ஆகிய தேதிகளில் பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது. இம்மாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ்அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதில் தமிழ் இலக்கியச் சேவைக்காக, அதிராம்பட்டினம் தமிழ்அறிஞர் அதிரை அஹமத் அவர்கட்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கப்பட உள்ளது.
மாஷா அல்லாஹ் காக்கா இது உங்களுக்கு லேட்டாகவே கிடைத்துள்தென்று நான் கருதுகிறேன் பன்முகம் கொண்ட உங்களுக்கு இது எப்போதே கிடைத்திருக்க வேண்டும், லேட்டாக கிடைத்தாலும் லேடஸ்டாக நினைத்துக்கொள்கிறோன், தொடர்ந்து இன்னும் தாங்கள் பல விருதுகளை பெற வேண்டுமென்று து.ஆ செய்கிறேன். என் வாழத்துகள் காக்கா
ReplyDelete