தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, காஞ்சிபுரம்
கலெக்டர் கஜலட்சுமி உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.
பணி இடமாற்றம் குறித்து தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபீதா மாற்றம்
செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக உதயச் சந்திரன் அந்த இடத்தில் நியமனம்
செய்யப்பட்டுள்ளார். சபீதா சிமெண்ட் கழக எம்டியாக நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் கலெக்டராக இருந்த கஜலட்சுமிக்கு பதிலாக பி. பொன்னையா
நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று சென்னை கலெக்டராக இருந்த மகேஸ்வரி,
வணிக வரி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக
அன்புச்செல்வன் ஐஏஎஸ் சென்னை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து ஆணையராக தயானந்த் கட்டாரியாவும், தொழில்துறை முதன்மைச்
செயலாளராக அதுல்ய மிஸ்ராவும் நியமனமிக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை
முதன்மைச் செயலராக சுனில் பாலிவலும், சிறுபான்மை நலத்துறை செயலாளராக
வள்ளலாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment