Latest News

  

மதத்திற்கு எதிராக, வாட்ஸ்அப், பேஸ்புக்கில் கருத்து கூறியதற்காக வாலிபர் கொலை! அதிர்ச்சியில் கோவை

 
கோவையில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் தனது சொந்த மதத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பரப்பி வந்ததற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பாரூக் (31). உக்கடம் பழைய இரும்பு சந்தையில் வியாபாரம் செய்து வந்தார். வியாழக்கிழமை பாரூக்கை செல்போனில் அழைத்த மர்ம நபர் தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென, உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறு கூறியுள்ளார்.

தாக்குதல் இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு சென்ற பாரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க தொடங்கியுள்ளனர்.
 
கொலை ரத்த வெள்ளத்தில் மிதந்த பாரூக் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரண் இந்நிலையில் போத்தனூர் பகுதியை சேர்ந்த அன்சர்ந்த் , கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இவரை வருகின்ற 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தேடும் பணியை தீவிரபடுத்தி உள்ளனர்.

மத கருத்து கொலை செய்யப்பட்ட பாரூக் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவரை இஸ்லாம் மார்க்கத்திலிருந்து நீக்கி உள்ளனர். இந்நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலை தளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவேற்றம் செய்ததால் ஆத்திரமுற்று சிலர் கொலை செய்ததாக தெரியவருகிறது.

வாட்ஸ்அப் குரூப் வாட்ஸ்அப் குரூப் நடத்தி வந்த பாரூக் அதில் கடவுள் மறுப்பு கொள்கையை தெரிவித்து வந்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்திலும் மத மூட நம்பிக்கைகள், கடவுள் மறுப்பு விஷயங்களை தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இவைதான் அவரது உயிரை பறிக்க காரணமாக இருந்துவிட்டன என கூறப்படுகிறது. கருத்து சுந்திரத்திற்கு எதிராக கொலையாகவே இது பார்க்கப்படுகிறது.

காவல்துறை சந்தேகம் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் சிலரை கோபப்படுத்தியுள்ளன. அந்த குரூப்தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம் என்று கோவை துணை கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார். கோவையில் தாலிபானிசம் தனது முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளதா என அஞ்சியுள்ளனர் மக்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.