சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம். எங்களை
அடித்து, உதைத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள். இது குறித்து
ஆளுநரிடம் நேரில் சந்தித்து புகார் தர உள்ளோம் என எதிர்க் கட்சித் தலைவர்
ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இருந்து சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த அவர்
நிருபர்களிடம் பேசுகையில், ஜனநாகய முறையில் போராட்டம் நடத்திய எங்களை
தாக்கியுள்ளனர் என்றார்.
சட்டசபை வளாகத்தில் இருந்து காரில் வெளியே வந்த ஸ்டாலினை ஏராளமான
இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்து கோஷம் இட்டனர். இதையடுத்து காரை
விட்டு கிழிந்த சட்டையுடன் வெளியே வந்த ஸ்டாலின் அவர்களுடன் கை குலுக்கி
நன்றி சொல்லிவிட்டு சென்றார்.
No comments:
Post a Comment