தமிழக சட்டசபை நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது என சட்டசபை செயலாளர்
ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் முதல்வராக பதவியேற்றுள்ள
எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளார்.
ஆட்சி அமைக்க அழைக்காமல் இழுத்தடிப்பு செய்து கொண்டிருந்த ஆளுநர்
வித்யாசாகர் ராவ், நேற்று அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபைக் குழு தலைவரான
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து,
மாலை 4 மணிக்கு பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
பதவியேற்பைத் தொடர்ந்து அடுத்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை
நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு சட்டசபை கூடும் எனவும் தலைமை
செயலகத்திலுள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலளர் ஜமாலுதீன்
வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினம் முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது
பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளார். முதல்வர். ஆட்சியைப் பிடித்த
பி்ன்னரும் கூட அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரிலேயே தங்கியுள்ளனர். எனவே
உண்மையிலேயே எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா என்ற
கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான நாளை தெரிய வரும்.
No comments:
Post a Comment