பெரும் பதட்டமான சூழலில் சசிகலா கூவத்தூர் ரிசார்ட்டை விட்டு
கிளம்பினார். அவருடன் அக்காள் மகன் தினகரனும் புறப்பட்டார். அவர்கள் போயஸ்
கார்டனுக்குச் செல்வதாக தெரிகிறது.
சென்னையை அடுத்த கூவத்தூர்
ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்களை சிறை வைத்துள்ள சசிகலா நேற்றிரவு முதல்
தானும் அங்கேயே தங்கியிருந்தார். இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பளித்த
உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரையும் உடனடியாக சரணடைய
ஆணையிட்டது.
ஆனால் சசிகலா இதுவரை சரணடையவில்லை. மேலும் தான் தங்கியிருந்த
போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கும் அவர் திரும்பாமல்
இருந்தார். அஏவர் வெளியேறுவாரா இல்லையா என்பதும் கேள்விக்குறியானது. இந்த
நிலையில் ரிசார்ட்டைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். ரிசார்ட்டில்
உள்ள அதிமுகவினர் வெளியேற மறுப்பதால் அங்கு மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு ஆயிரம் போலீசாரும் 500
அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரவு கூவத்தூரை விட்டு சசிகலாவும், தினகரனும்
அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் போயஸ் கார்டன் புறப்பட்டுள்ளதாக
கூறப்பட்டது.
No comments:
Post a Comment