தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பிக்களும் புஸ்சி கேட் (பூனை) என்று
கூறியுள்ளார் பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி. இந்த
எம்.பிக்களில் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனும் ஒருவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து குடியரசு
தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சு.சுவாமி நேற்று வெளியிட்ட
டிவிட் ஒன்றுக்கு பதிலளித்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில்,
"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற முடியாத நீங்கள் உங்கள் எம்.பி
பதவியை ராஜினாமா செய்யலாம்" என கூறியிருந்தார்,
இதற்கு பதிலளித்துள்ள சு.சுவாமி, நான் ஒன்றும் தமிழகத்திலிருந்து
எம்.பியாகவில்லை. லோக்சபாவுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினீர்களே
அந்த 39 புஸ்ஸி கேட் எம்.பிக்களை போய் கேளுங்கள் என பதிலளித்துள்ளார்.
சிறுவர்கள் படிக்கும் ரைம்ஸில் வரும் புஸ்ஸி கேட், அதாவது பூனை என்ற
வார்த்தையை எம்.பிக்களை பார்த்து பயன்படுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த
ஏதுவாக சட்டத்தில் திருத்தம் செய்வதில் தமிழக எம்.பிக்கள் எந்த
முயற்சியையும் எடுக்காமல் சும்மா இருந்ததை அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆனால், இதில் ஒரு எம்.பி பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் சில டிவிட்டுகளில், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் வந்த
கருணாநிதி, ஈ.வே.ரா (பெரியார்), எம்.ஜி.ஆர் போன்றவன் நான் அல்ல என்றும்,
தமிழர்களிலேயே தான்தான் திறமையான நபர் எனவும் கூறிக்கொண்டுள்ளார்
சு.சுவாமி. மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்துதான் தன்னுடையது
என்றும், எழுத்துப்பூர்வ வாதத்தை கூட சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
செய்துள்ளதாகவும் கூறியுள்ள சு.சுவாமி, தனித்தனி கலாசாரம் என்று எதுவுமே
இந்தியாவில் கிடையாது. தமிழ் கலாசாரம் என கூறப்படுவதும் இந்து கலாசாரம்தான்
என்றும் கூறியுள்ளார்.
I was not elected from Tamil Nadu. You ask the 39 pussy cats you have
elected to Lok Sabha, says Subramaniyan Swamy.
தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பிக்களும் புஸ்சி கேட் (பூனை) என்று கூறியுள்ளார்
பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி. இந்த எம்.பிக்களில் பாஜகவை
சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment