வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக
தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை
மையம் கூறியுள்ளது.
அந்தமான் கடற்பகுதியில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அண்மையில்
புயலாக மாறியது. வர்தா என பெயரிடப்பட்ட அந்தப்புயல் சென்னை பழவேற்காடு
பகுதியில் கடந்த 12ஆம் தேதி கரையை கடந்தது.
இந்தப் புயலால் சென்னை மாநகர் சின்னாபின்னமானது. 3000க்கும் மேற்பட்ட
மரங்கள் மற்றும ஏராளமான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் பல
இடங்களில் இதுவரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்போது தான் இயல்புநிலை
மெல்ல திரும்புகிறது.
வர்தா புயல் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில்
தற்போது தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என
வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மேலும
வலுவடையுமா என்பது நாளை தான் தெரியும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.


No comments:
Post a Comment