பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளதாகவும், அதற்கான பொருட்கள் கொள்முதல் பணியில் இறங்கி உள்ளதாகவும்
பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறு
பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறுவை பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை
அச்சடிக்கப் பொருட்கள் கொள்முதல் பணியில் இறங்கி உள்ளதாக மாநிலங்களின் நிதி
அமைச்சரான அர்ஜூன் ராம் லோக் சபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும்
போது தெரிவித்துள்ளார்.
சோதனை முயற்சி
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை சில சோதனை முயற்சிகளுக்குப் பிறகு ஆர்பிஐ
வெளியிட இருந்தது.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளைக் காகிதத்தில் அச்சடிப்பதை தவிர்த்து
பிளாஸ்டிக் இழைகளில் அச்சடிக்க ரிசர்வ் வங்கி 2010ஆம் ஆண்டு துவக்கத்தில்
முடிவு செய்தது.
சில நகரங்களில் சோதனை
ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி பிளாஸ்டிக் இழைகளில் ரூபாய் நோட்டுகளை
அச்சடிக்க ரிசர்வ் துவங்கியது. இந்த ரூபாய் நோட்டுகளை இந்தியா முழுவதும்
ஒரே சமயத்தில் வெளியிடாமல் சோதனை முயற்சியாக சில நகரங்களில் மட்டும்
செயல்படுத்த ரிசரவ் வங்கி வெளியிட்டது.
சோதனை நடைபெற்ற நகரங்கள்
முதற்கட்டமாக 10 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் வெளியிட்டனர்.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம்
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் சராசரி ஆயுட்காலம் 5 வருடம் என்றும்
கள்ளநோட்டு அடிக்க இயலாது என்றும் கூறுகின்றனர். பேப்பரில்
அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை விட பிளாஸ்டிக்கில் அச்சடிக்கப்படும்
ரூபாய் நோட்டுகள் சுத்தமாகவும் இருக்கும்.
முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் 1968ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா
டாலர்கள் அச்சடிக்கப்பட்டது. இது மிகவும் பாதுகாப்பானது. இத்தகைய
பிளாஸ்டிக் நோட்டுகளைக் கள்ளத்தனமாக அச்சிட முடியாது.
No comments:
Post a Comment