தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை நாளை சந்திக்க
உள்ளார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளார்.
டெல்லியில் நாளை மோடியை தமிழக முதல்வர் சந்திக்கிறார். அப்போது வர்தா புயல்
நிவாரணத்திற்காக நிதி கேட்பதோடு, வேறு பல கோரிக்கைகளையும் விடுக்க
உள்ளார். அதில் சில கோரிக்கைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
என்றும், நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை நிறுவ வேண்டும்
என்றும் கோரிக்கைவிடுக்கப்பட உள்ளதாம்.
இக்கோரிக்கைகளை கொடுத்துவிட்டு, நாளையே முதல்வர் பன்னீர் செல்வம், சென்னை
திரும்ப உள்ளார். இவ்வாறு அந்த தகவல் தெரிவிக்கிறது.


No comments:
Post a Comment