போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி மற்றும்
அவரது நண்பர் சீனிவாசலுவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சட்டவிரோத
பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியும் சீனிவாசலுவும்
புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டர் சேகர் ரெட்டி. ரூ10,000 கோடிக்கும்
அதிகமான தமிழக அரசின் ஒப்பந்தங்கள் சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
போயஸ் கார்டன் மற்றும் அமைச்சர்கள் பலருக்கும் நெருக்கமானவர் சேகர் ரெட்டி.
வருமான வரித்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சேகர் ரெட்டி
வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ131 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம்
பிடிபட்டது. இதில் ரூ30 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் இருந்தன.
விசாரணை
இதனடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சேகர் ரெட்டி
மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சேகர்
ரெட்டி. அவரது நண்பர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கைது
இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டியும் அவரது நண்பர் சீனிவாசலுவும்
கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருவரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
சிறை
கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஜனவரி 3-ந் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ
நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் புழல் சிறையில்
அடைக்கப்பட்டனர்.
ராமமோகன் ராவ்
சேகர் ரெட்டி ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுத்த
வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ்
ரெய்டில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.





No comments:
Post a Comment