சென்னை தலைமை செயலகத்தில் ராம மோகன ராவ் அறையில் வருமான
வரித்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது. இதையடுத்து அவரது உதவியாளர்கள்
இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைமை செயலகத்தில் தலைமை செயலர் ராம மோகன ராவின் அறையில் இன்று மதியம்
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதியம் 2.20 மணிக்கு
தொடங்கிய சோதனை இரவு 7.30க்கு நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை தற்போது நிறைவு
பெற்றது. ராம மோகன ராவின் கணிணியில் இருந்த தகவல்கள் மற்றும் அறையிலிருந்து
சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ராம
மோகன ராவின் நேர்முக உதவியாளர்கள் சேகர், குமார் ஆகிய இருவரையும்
விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அண்ணாநகரில் உள்ள ராம மோகன ராவ்வின் வீட்டிலும், திருவான்மியூரில் உள்ள
அவரது மகன் விவேக் வீட்டிலும் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள்
சோதனை நடத்தி வருகின்றனர்.


No comments:
Post a Comment