சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள்
வழக்கம் போல் இயங்கும் என தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர்
கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
வர்தா புயல் கரையைக் கடந்த போது வீசிய பலத்த காற்றால் சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் பெரும்
பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பலத்த சூறைக் காற்றால் ஏராளமான மரங்கள்
சாலைகளில் முறிந்து விழுந்தன. இதனால் நகரின் முக்கிய சாலைகளில்
போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மின்கம்பங்கள் சாய்ந்திருந்ததால் மின்சேவை முற்றிலும் தடைபட்டது. இதனால்
கடந்த மூன்று நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்
உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த மூன்று மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி
வருவதால், அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம் போல் செயல்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் மஃபா. பாண்டியராஜன்
இத்தகவலை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment