வர்தா புயல் பாதிப்பால் சென்னை நகரில் மின் விநியோகம்
பாதிக்கப்பட்டது. இதனால் பல ஏடிஎம்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. ஏற்கனவே
பணம் இன்றி பல ஏடிஎம்கள் செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது
மின்சாரமின்றி செயல்பட்டுக் கொண்டிருந்து ஒன்றிரண்டு ஏடிஎம்களும்
செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
வர்தா புயல் காரணமாக ஏ.டி.எம். சேவைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
சென்னையில் சுமார் 3200 ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில்
பெரும்பாலான ஏ.டி.எம்கள் இயங்கவில்லை என்பதால் பணம் எடுக்க முடியாமல்
சென்னை வாசிகள் தவித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாததாலும், நெட்வொர்க்
பிரச்சினையாலும் ஏடிஎம்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மின்னனு பணப்பரிமாற்றத்தை அரசு ஊக்குவிப்பதாக கூறினாலும், வர்தா
புயலுக்குப் பின்பு பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரெடிட் கார்டுகளை
பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சில்லறை தட்டுப்பாட்டை மெல்ல மெல்ல சமாளித்து வந்த மக்களுக்கு வர்தா புயல்
மீண்டும் ஒரு பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும்
மூடிக்கிடக்கும் ஏடிஎம்களை எதிர்நோக்கும் சூழல் உருவாகியுள்ளது.
வர்தா புயல் ஏற்படுத்தி சென்ற சோகத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில்,
பணம் இல்லாமல் அத்யாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டு
வருகின்றனர். ஏற்கனவே கையில் இருந்த பணத்தை எல்லாம் வங்கிகளில் டெபாசிட்
செய்துவிட்டு தற்போது ஏ.டி.எம்.களை நம்பிள்ள நடுத்தர சென்னை வாசிகளுக்கு
ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளது மேலும் ஒரு துன்பமாக அமைந்துள்ளது.


No comments:
Post a Comment