சசிகலாவே அதிமுக பொதுச்செயலர் என பொன்னையன் கூறியுள்ளார். சசிகலாவுக்காக அதிமுக கட்சி விதிகள் தளர்த்தப்படும் எனவும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்பதற்கு ஏற்ப கட்சி விதிகளை
தளர்த்துவோம் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையன்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொன்னையன் கூறியதாவது:
1982-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து வருகிறார் சசிகலா.
அதிமுகவில் 30 லட்சம் தொண்டர்கள் என்ற நிலையை 1.5 கோடியாக உயர்த்த
ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா.
அவர் அதிமுகவின் பொதுச்செயலராவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. அவருக்காகவே
கட்சியின் விதிகளை தளர்த்துவோம்.
சின்னம்மா சசிகலா மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை. பொய்யானவை.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.


No comments:
Post a Comment