எடப்பாளையம் கிராமம் அருகே இன்று நள்ளிரவு 1 மணி அளவில் லாரி-கார்
நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த 3 ஆண், 3 பெண் , ஒரு சிறுமி
உட்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 3
பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் திருவண்ணாமலை அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் இலவனாசூர் கோட்டை ஏமம் கிராமத்தை சார்ந்த 10 பேர்
இரவு திருப்பதிக்கு சென்றனர். இவர்கள் பயணம் செய்த கார் திருவண்ணாமலை
மாவட்டம் எடப்பாளையம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓசூரில்
இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர்
மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ
இடத்தில் பலியாகினர் மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில்
சிகிச்சைக்காக திருவன்ணாமலை அரசு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த திருவன்ணாமலை மாவட்ட ஆட்சியர் சம்பவ
இடத்திற்கு விரைந்து பார்வையிட்டு வருகிறார். இந்த விபத்து குறித்து
திருவன்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் விழுப்புரம்
மாவட்டம் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக
தகவல் வெளியாகியுள்ளது.


No comments:
Post a Comment