15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில்
இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பெல்ஜியத்தை 2-1 என்ற கோல்
கணக்கில் வென்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் ஆண்களுக்கான 11வது ஜூனியர் உலக கோப்பை
ஹாக்கி தொடர் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள்
இன்று மோதின.
விறுவிறுப்பான இந்த போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில்
வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் சாம்பியன்
பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு இந்திய அணி கடந்த 2001
-ம் ஆண்டு கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment