போயஸ் கார்டன் வீட்டுக்கு நெருக்கமான ராம மோகன் ராவ் உடன் நட்பாக
இருந்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
தலைமைச் செயலாளராக பதவி வகித்த ராம மோகனராவ் வீடு மற்றும் உறவினர்களின்
வீடு, அலுவலகங்களில் புதன்கிழுழமை வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவரது
மகன், சம்பந்தி, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. பல
கோடி பணம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.
வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து வியாழக்கிழமையன்று அவர் சஸ்பெண்ட்
செய்யப்பட்டார். அவருக்குப் பதில், புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா
வைத்தியநாதனை நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்தார்.
தமிழக அரசின் 78 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக வருமான வரித்துறையினர்
தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்துள்ளனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு
எதிரானது' என அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதே
நேரத்தில் ராம மோகன் ராவ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
ராம மோகன் ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். வருமான
வரித்துறையினர் அளிக்கும் அறிக்கையை வைத்து அவர் மீது கிரிமினல் வழக்கு
பதிவு செய்யப்படும். சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டது
போல அவருடன் நெருக்கமாக இருந்த ராம மோகன் ராவ் கைது செய்யப்படுவார் என்று
தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ராம மோகன் ராவ் மட்டுமல்லாது, சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்த
10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று தகவல்
வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment