தலாக் விவகாரத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி இன்று தனது கருத்தை
பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து வெளிப்படுத்தினார்.
"தலாக்" என்ற வார்த்தையை மூன்றுமுறை கூறி விவகாரத்து செய்து கொள்ளும்
நடைமுறை, இஸ்லாமிய வழக்கப்படி காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு
எழுந்து அதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில்,
மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும், இம்முறைக்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய அமைப்புகள் பலவும், மத்திய அரசின் நிலைப்பாட்டை
விமர்சித்துள்ள நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி இன்று முதல் மு்றையாக
தனது கருத்தை தெரிவதி்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், மகோபா என்ற இடத்தில் இன்று நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ஜனநாயகத்தில் உரையாடலும் விவாதமும் இருக்க
வேண்டும். அரசு தன் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. மும்முறை
தலாக் நடைமுறையினால் முஸ்லிம் பெண்களின் வாழ்வு சீரழிக்கப்படக் கூடாது.
நாம் முஸ்லிம் பெண்களின் உரிமைகளை காப்பதா வேண்டாமா? அவர்களுக்கும் சமத்துவ
உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா?
நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக பெண்களுக்கு
அநீதி இழைப்பதில் குறியாக இருக்கின்றன. இது என்ன நீதி என கேள்வி
எழுப்பினார். ஒரு இந்து பெண் சிசுக்கொலை செய்தால் சிறையில்
தள்ளப்படுகிறார். அதேபோலத்தான், போனில் கூட தலாக் கூறிவிட்டு பெண்கள்
வாழ்க்கை அளிக்கப்படுவதற்கு எதிராகவும் நடவடிக்கை தேவைப்படுகிறது.
டிவி சேனல்கள் இந்த விவகாரத்தை இந்து மற்றும் முஸ்லிம் சண்டையாகவோ, பாஜக
மற்றும் பிற கட்சிகளின் மோதலாகவோ சித்தரிக்க வேண்டாம். சுப்ரீம் கோர்ட்டில்
மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அரசின் நிலைப்பாட்டை
சரியாக எடுத்து வைத்துள்ளோம். ஜனநாயகத்தில் மதத்தின் பெயரால் பெண்களுக்கு
எதிராக கொடுமைகள் நடைபெறக்கூடாது. பாரபட்சம் இருக்க கூடாது என்பது மட்டுமே
அரசின் நோக்கம் என்றார் அவர்.
No comments:
Post a Comment